• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டு வாழ்த்து வீடியோ மூலம் பதில் சொன்ன இளையராஜா

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதை அவரது மேலாளர் மறுத்திருந்தார். அவர் ஆன்மிக பயணம் சென்றுள்ளார் என்றார்.


இந்நிலையில் இளையராஜா இந்த விஷயத்தை குறிப்பிடாமல் புத்தாண்டு வாழ்த்து கூறுவது போன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் காரில் பயணம் செய்யும் இளையராஜா, தனது இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‛சகலகலா வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற ‛‛இளமை இதோ இதோ….” என்ற புத்தாண்டு வாழ்த்து பாடலை பாடியபடி வாழ்த்து சொல்லி உள்ளார். இளமை இதோ, இனிமை இதோ என்ற வார்த்தை வரும்போது தன்னை சுட்டிக்காட்டி உள்ள அவர் கடைசியில் ‛இதெப்படி இருக்கு’ என தெரிவித்துள்ளார்.


தன்னைப்பற்றி பரவிய வதந்திக்கு பதிலடி கொடுக்கவே இப்படியொரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.