இனி தொலைந்த போனை விரைவில் கண்டுபிடிக்க, மத்திய அரசு மே 17 முதல் சிஇஐஆர் என்ற அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது.
மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் சிஇஐஆர் கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் மே 17ஆம் தேதி முதல் மற்றும் மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மொபைல் போன்களிலும் கண்டிப்பாக ஐஎம்இஐ என்ற 15 தனித்துவ எண் இருக்கும். இந்த நம்பரை பதிவு செய்து காணாமல் போன உங்கள் மொபைலை விரைவாக மீட்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் திருட்டு குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் திருடர்களை அடையாளம் காண்பது போலீசாருக்கு எளிதாகும். இந்த சிஇஐஆர் அமைப்பு மே 17 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஐஎம்இஐ எண்ணின் மூலம் தொலைந்த போன்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.