• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்..?

Byவிஷா

May 15, 2023

கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 18 அன்று ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகா அமைச்சரவை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவி ஏற்கிறார். அன்றைய தினம் அமைச்சரவை அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆன சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆனால் முதல்வர் யார் என்பதில் இன்னும் தெளிவு இல்லை. ஒருபுறம் சித்த ராமையாவையும், மற்றொருபுறம் டிகே சிவகுமாரும் முதலமைச்சராக வேண்டுமென ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் 135, பாஜக 66, ஜேடிஎஸ் 19, பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.