• Sun. Nov 10th, 2024

10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடி

ByA.Tamilselvan

May 27, 2022

அரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணிக்கு 248 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://recruitment.itbpolice.nic.in/index.php என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். Indo-Tibetan Border Police (ITBP) என்ற மத்திய அரசு நிறுவனம் இந்த பணிக்கான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பணியின் பெயர் Head Constable .இந்த வேலைக்கு விண்ணபிக்க ஜூலை7 ம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் கட்டாயம் 10-வது மற்றும் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த மத்திய அரசு வேலையில் Head Constable பணிக்கு 18-25 க்குள் இருக்கவேண்டும்.

Head Constable ITBP serving Personnel விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.மொத்த 248 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.Physical Efficiency Test. Physical Standard Test.Written Test.Skill Test.DME / RME,Document Verification.மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ஒரே விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டும். எஸ்.சி.எஸ்.டி,முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இந்தவேலைகுறித்து முழுவிபரம் தெரிந்து கொள்ள http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_4_2223b.pdf இந்த இணைப்பை கிளிக் செய்யவும் .இந்த வேலை குறித்து அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://recruitment.itbpolice.nic.in/index.php இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *