• Mon. Apr 21st, 2025

ஒன்றும் பேசவில்லை என்றால் அல்வா சாப்பிடுவதற்கு சென்றீர்களா.ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு..,

ByPrabhu Sekar

Mar 29, 2025

சென்னை அடுத்த தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

மூன்றாவது மொழி எங்கிருந்து வந்தது 1965 இந்த பிரச்சனை முடிந்து விட்டது இந்திய அரசியல் சாசனத்தை அளித்த போது ஒரு மொழி தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் அரசு மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசியல் நிர்ணய சபை அதை நிராகரித்துவிட்டது இந்திய ஆட்சி மொழி ஆனால் ஆங்கிலமும் கூடுதல் ஆட்சி மொழி 1950 – ல் முடிந்த பிரச்சனை 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அன்று எழுதியவர்கள் 1965 வரும்பொழுது ஆங்கிலம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்ததால் 1963 – ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

1950 எடுத்த முடிவு 1963 உறுதிப்படுத்தப்பட்டது பிறகு 1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்த போது இந்திரா காந்தி அவர்கள் டெல்லியில் அமைச்சராக இருந்தார். பிரதமராக இல்லை அமைச்சராக இருந்தவர் சென்னைக்கு பறந்து வந்து நான் என் தந்தை கொடுத்த வாக்குறுதியை மீண்டும் தருகிறேன் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என அவரும் கூறினார்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் மீண்டும் இந்த பிரச்சினையை கிளப்புகிறார்கள் அதை முதலில் நாம் கேட்க வேண்டும். 1950 ,1963,1965 ல் முடிந்த பிரச்சனையை 60 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏன் கிளப்புகிறார்கள் ஏன் இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புகிறார்கள் என்றால் அடுத்த வருடம் தேர்தல் வருகிறது. அதனால் தான் அவர்கள் மீண்டும் இதை கிளப்புகிறார் தேர்தல் இல்லையென்றால் இந்த பிரச்சனையை அவர்கள் மீண்டும் கிளம்ப மாட்டார்கள். நரேந்திர மோடி எப்போது பிரதமராக வந்தார் 2004- ல் நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என குடுகுடுப்பு நபர் போல் சொல்லிக் கொண்டு வந்தார். ஐந்து ஆண்டுகள் ஒட்டி விட்டார். பிறகு பண மதிப்பு இழப்பு வந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி திடமாக திறமையாக செயல்படாததன் காரணமாக மீண்டும் வெற்றி பெற்றார். அதை யாரும் மறுக்க முடியாது 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் இந்த பிரச்சனையை கிளப்பவில்லை. மூன்றாவது முறை மிகப்பெரிய அடி செம்மட்டி அடியாக தந்திருக்க வேண்டும். தமிழ்நாடு செம்பட்டி அடி தந்தது கேரளம் செம்பட்டி அடி தந்தது. ஆனால் வட மாநிலங்களில் செம்மட்டி அடித்த தரவில்லை ஏதோ இருந்தும் பிழைத்தோம் என்று 240இடங்களை பெற்று 400 இடங்கள் பெறுவோம் என்று சொன்னார்கள். ஆனால் 240 இடங்களில் தான் வெற்றி பெற்றார்கள். இரண்டு சிறிய கட்சிகளோடு துணை வைத்துக் கொண்டு ஆட்சி அமைத்து விட்டார் மறுக்கவில்லை இந்த வருடம் ஏன் கிளப்புகிறார்கள்.

ஒரு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது இரண்டாவது காரணம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்திய உணர்வை இந்தி வெறியை மீண்டும் ஊத்த வேண்டும் என்பதற்காக. இதுதான் பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சனையும் கிடையாது. நம்மை பார்த்து மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்கிறார்கள் நான் கேட்கிறேன் இங்கு கேந்திரிய வித்யாலயா இருக்கிறது என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன என்னுடைய சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. தாம்பரத்தில் ஒன்று இருக்கிறது அதுபோல தமிழ்நாட்டில் மொத்தம் 52 பள்ளிகள் உள்ளன. இதை மத்திய அரசு இயக்கி வருகிறது மத்திய அரசின் கல்வி அமைச்சர் இதை இயக்கி வருகிறார் மத்திய அரசின் பிரதம மந்திரி இவை அனைத்தையும் இயக்குகிறார்.

அனைவரும் வாருங்கள் கேந்திர வித்யாலயாக்கு செல்வம் தமிழ்நாட்டிலுள்ள 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆங்கிலம் தான் பயிற்சி மொழி இரண்டாவது மொழி ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் மூன்றாவது மொழியே கிடையாது. தமிழ் ஆசிரியர்களே கிடையாது தமிழ்நாட்டில் உள்ள 52 கேந்திரிய வித்யா கலை ஒரு தமிழாசிரியர்கள் கூட கிடையாது தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை யாரும் இழுத்து மூட சொல்லவில்லையே மத்திய அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களில் 52 பள்ளிக்கூடங்களில் இரண்டு மொழி தான் ஏன் நீங்கள் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களில் மூன்று மொழிகள் கிடையாது இரண்டு மொழி தான் இதை விட மோசம் வடநாடு நான் வடநாட்டில் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கின்றேன். பல மாநிலங்களில் நண்பர்கள் இருக்கிறார்கள் பல மாநிலத்து மக்களை நான் சந்திக்கிறேன். அவர்களோடு நான் பேசுகிறேன் கடந்த வாரம் இந்தோர் சென்றிருந்தேன். அங்கு ஒரு கால் டாக்ஸி டிரைவர் காரை இயக்குகிறார். இந்தியில் தான் அவர் பேசினார் ஏம்பா இந்தோர்ரில் வண்டி ஓட்டுகிறாயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எல்லாம் வருவார்களே இந்தி மட்டும் பேசினால் எப்படி பிழைக்க முடியும் என்று கேட்டேன். சார் நான் பேசிப் பேசி ஒரு வார்த்தைகள் கற்றுக் கொண்டேன் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் என ஒரு சில வார்த்தைகள் தெரியும். ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லையா என்று அவரிடம் கேட்டேன் ஆங்கிலம் வாத்தியார்கள் இருந்தால்தானே ஆங்கிலம் கற்றுக் கொடுப்பார்கள். மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களில் அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கில ஆசிரியர்களே கிடையாது. இந்தி தான் ஆட்சி மொழி இந்தி தான் பேச்சு மொழி இந்தி தான் பயிற்சி மொழி இந்தி தான் பாட மொழி. ஒரு மொழி தான் நான் இதை பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இதுவரை யாரும் மறுக்கவில்லையே வட நாட்டு முதலமைச்சர் யாரேனும் இதை மறுத்திருக்கிறார்களா? பேச்சு மொழி இந்தி ஆட்சி மொழி இந்தி பயிற்சி மொழி இந்தி பாடமொழி இந்தி இரண்டாவது மொழியை கிடையாது அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கில ஆசிரியர்கள் இங்கே ஒன்று அங்கே ஒன்று என இருப்பார் அவர்கள் ஆங்கில ஆசிரியர்கள் அல்ல சரித்திர ஆசிரியர் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பார் கணித ஆசிரியர் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பார் ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்கள் என எவரும் இல்லை ஆங்கிலமே கற்றுக் கொடுக்கவில்லை தென்னாட்டு மொழி தமிழ் தெலுங்கு மலையாளம் என்று அமைச்சர் பேசுகிறார் ஒழிய அமைச்சர் பேசுகிறார் இரண்டாவது மொழிக்கு ஆசிரியர் கிடையாது மூன்றாவது மொழிக்கு எங்கு ஆசிரியர்கள் இருப்பார்கள்.

மத்திய அரசு நடத்தக்கூடிய பள்ளிகளிலேயே இரு மொழி ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழி நம்ம மட்டும் முன் மொழியை கற்றுக் கொள்ள வேண்டுமா என்னுடைய கருத்து என்னவென்றால் இரண்டு மொழி திட்டத்தை செம்மையாக செயல்படுத்த வேண்டும் நமது குழந்தைகள் கூட ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லை எழுத முடியவில்லை தனியார் பள்ளிக்கூடங்களில் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கக்கூடிய குழந்தைகள் வேண்டுமானால் தமிழ் ஆங்கிலம் சரளமாக பேச முடியும் எழுத முடியும் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் தமிழிலே சரளமாக பேச முடியும் எழுத முடியும் ஆங்கிலத்தை தட்டு தடுமாறி தான் பேசுகிறார்கள் பேச கூச்சப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தால் ஆங்கிலம் பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது ஆங்கில வகுப்பறையை தவிர வேறு எங்கேயும் ஆங்கிலம் பேசுவதற்கான வாய்ப்பில்லை ஆங்கிலம் நூல்கள் அவர்கள் படிப்பது கிடையாது. ஆகவே தமிழில் தான் சரளமாக எழுதுகிறார்கள் பேசுகிறார்கள். எனவே இந்த இரண்டாவது மொழியை செம்மையாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தமிழ்நாடு அரசுக்கு இந்த வேண்டுகோளை நான் விடுக்கின்றேன் இரண்டு மொழியை வெற்றிகரமாக செய்ய வேண்டும் ஆங்கிலத்திலும் பேச முடியும் தமிழிலும் பேச முடியும் சிந்திக்க முடியும் நூல்களைப் படிக்க முடியும் ஆராய்ச்சி நூல்களை படிக்க முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும். மூன்றாவது மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் முன்மொழி கிடையாது எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை அமல் செய்தது கிடையாது தமிழ்நாடு மட்டும் ஏன் அமல் செய்ய வேண்டும் இந்த கேள்விக்கு இதுவரை பதிலே கிடையாது மீண்டும் சொல்கிறேன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முன்மொழிக் கொள்கை அமல் இல்லை.

இரண்டாவது பிரச்சனை தொகுதி சீரமைப்பு இந்த பிரச்சனையை 1971 இல் இந்திரா காந்தி முடிவுக்கு கொண்டு வந்தார் அரசியல் சாசனம் என்ன சொல்கிறது மக்கள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். குடியரசு பிறந்த பிறகு அரசியல் சாசனம் எழுதிய பிறகு முதல் சென்சஸ் 1961 இல் நடைபெற்றது அதை சீரமைத்தார்கள் நான் அதை மறுக்கவில்லை 1971 இல் சென்சஸ் நடந்த பொழுது இந்த பிரச்சனை கிளம்பியது இந்திரா காந்தி அப்போது ஒரு முடிவுக்கு வந்தார் அது ஒரு விவேகமான புத்திசாலித்தனமான முடிவு 1971 இல் என்ன மக்கள் தொகை இருக்கிறதோ அதன்படி பிரிப்போம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு 50 ஆண்டுகளாக பிரித்தார்கள் 50 ஆண்டுகளுக்கு இதே சீரமைப்பு தான் ஆகவே தான் தமிழ்நாட்டுக்கு 39 இடங்கள் கிடைத்தன 1981 இல் சென்சஸ் நடந்தது சீரமைக்க வில்லை 1991 இல் சென்சஸ் நடந்தது சீரமைக்கவில்லை 2001 இல் சென்சஸ் நடந்தது சீரமைக்கவில்லை 2011 இல் சென்சஸ் நடந்தது தொகுதி சீரமைப்பு கிடையாது 2021 இல் சென்சஸ் நடைபெறவில்லை நரேந்திர மோடி அவர்களின் புண்ணியத்தால் சென்சஸ் நடைபெறவில்லை காரணம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது ஆகையால் சென்சஸ் நடத்த முடியவில்லை என்று கூறினார்கள் நல்ல காரணம்தான் 2021 இல் சென்சஸ் நடைபெறவில்லை அடுத்த சென்சஸ் 2031 இல் நடைபெற வேண்டும் 2021 இல் நடைபெறாத சென்சஸ் எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம் அவர்கள் திட்டம் என்னவென்றால் 2026 இல் இந்த சென்சஸ்சை நடத்த வேண்டும் என்பது அவர்களது திட்டம்.

சென்சசை நடத்துங்கள் ஆனால் உடனே சென்சஸ் நடந்த பிறகு சீரமைப்பு நடைபெற வேண்டும் சீரமைப்பு என்றால் என்ன ஆகும் ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது ஒரு பெண் எத்தனை குழந்தைகள் பெற்று கொடுக்கிறார்கள் அதுதானே கணக்கு தாய்மை பருவத்தில் 16 வயதிலிருந்து 52 வயதுக்குள் தாய்மை பருவம் அந்த தாய்மை பருவத்தில் சராசரியாக அந்த மாநிலத்தில் அந்த நாட்டில் எத்தனை குழந்தைகளை ஒரு பெண் பெற்றுக் கொடுக்கிறார்கள்.

தமிழ்நாடு 1.7
ஆந்திரா 1.7
தெலுங்கானா 1.7
கர்நாடகா1.8
கேரளா 1.8
பீகார் 3.5
உத்திரபிரதேசம் 2.1

ஆகவே அவர்களின் மக்கள் தொகை வளர்ந்து இருக்கிறது நம்முடைய மக்கள் தொகை சிறந்த தன்மையை அடைந்திருக்கிறது இன்று தொகுதி சீரமைப்பு செய்தால் 39 இடங்கள் என்பது எட்டு குறைந்து 31 ஆகும்.
தமிழ்நாடு 8 இடங்களை இழக்கும் கர்நாடகா எட்டு இடங்களை இழக்கும் ஆந்திராவும் தெலுங்கானாவும் சேர்ந்து எட்டு இடங்களை இழக்கும் கேரளா இரண்டு இடங்களை இழக்கும் ஆக மொத்தம் 26 இடங்களை தென்னாடு இழக்கும்.

129 என்பது 103 ஆக மாறிவிடும் உத்தரப்பிரதேசம் 80 இல் இருந்து 103 ஆக மாறிவிடும் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் நாங்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்பதை கற்றுக் கொடுத்தோம் கடைபிடித்தோம் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை செம்மையாக நிறைவேற்றினோம் பிள்ளைகள் பெறுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினோம்.

தென்னாடு ஏறத்தாழ மக்கள் தொகையில் சிறத்தன்மை வந்திருக்கிறது ஆங்கிலத்தில் STABLE பாப்புலேஷன் என சொல்வார்கள்.

வடநாட்டில் குழந்தைகள் அதிக அளவில் பிறப்பதை நான் குறை சொல்லவில்லை அவர்களுக்கு வளர்ச்சி ஏற்பட்டு கல்வி மேம்பட்டு வசதிகள் ஏற்பட்டு அவர்களுக்கும் குறையும் அதில் என்ற சந்தேகமும் இல்லை உலகம் முழுவதும் சிறத்தன்மையை நோக்கி பல நாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன உத்தர பிரதேசமும் பீகார்ம் அந்த வழியில் போகும் அந்த மக்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிரேன்.

ஆனால் இன்றைய மக்கள் தொகையில் 2025 கணக்கின்படி மறு தொகுதி சீரமைப்பு செய்தீர்கள் என்றால் நம்முடைய எண்ணிக்கை குறையும் அவர்கள் எண்ணிக்கை கூடும் அது என்ன நியாயம் என்று கேட்கிறேன் இது நியாயமான கேள்வியா இல்லையா இது நியாயமான கேள்வியா இல்லையா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். நான்கு மந்திரிகள் அமர்ந்து இது நியாயம் ஆக தென்னாடு கேரளா கர்நாடகா, தமிழ்நாடு 26 இடங்களை குறைப்போம் உத்தரபிரதேசத்தில் கூட்டுவோம் என்றால் என்ன நியாயம் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பொழுதே நமது குரல் கேட்க மாட்டேங்கிறது 543 குரல்களில் 543 உறுப்பினர்கள் உள்ள மக்களவையில் தென்னாட்டுக்கு 129 தான் ஏறத்தாழ கால் பகுதி தான் அந்த கால் பகுதி இன்னும் குறைந்தால் என்ன குரல் கிடைக்கும்? நமக்கு என்ன மரியாதை கிடைக்கும் நமது முதல்வர் அங்கு சென்றால் யார் மரியாதை செலுத்துவார்கள் ஆகவே தான் 54ஆண்டுகள் இதே நலமை நீடிக்க வேண்டும் 54 ஆண்டுகளில் எந்த ஒரு பிரளயமும் ஏற்பட வில்லையே உத்தரப்பிரதேச மக்களும் அமைதியை தான காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விரும்பிய கட்சிகளை தேர்ந்தெடுக்கிறார்கள் நமக்கு விரும்பிய கட்சிகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம் நாடாளுமன்றத்திற்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

ஆனால் இன்றைய மக்கள் தொகையின் அடிப்படையில் மறு தொகுதி சீரமைப்பு செய்தால் பாஜகவின் கணக்கு என்னவென்றால் ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சி அமைக்கலாம் தமிழ்நாட்டுக்கு நரேந்திர வரவே வேண்டாம். இதை ஏற்றுக் கொள்ள முடியுமா. எவ்வளவு பெரிய கத்தி நமது கழுத்தில் தோன்றுகிறது என்பதை நாம் கூறுத யோசித்து செயல்பட வேண்டும்.

ஆகவே தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் ஏழு மாநிலத்தின் முதலமைச்சர்கள் துணை முதலமைச்சர் கூடி பேசி இருக்கிறார்கள் குறைக்க வேண்டாம் கூட்ட வேண்டாம் எங்களுக்கு குறைக்காதீர்கள் அவர்களுக்கு கூட்டாதீர்கள் அவர்களுக்கும் குறைக்காதீர்கள் எங்களுக்கும் கூட்டாதீர்கள்.

இது ஒன்னும் மிகப்பெரிய கோளாறு பிரளயமும் ஏற்படவில்லை இது இன்னும் 25 ஆண்டுகளுக்கு இருக்கட்டும் அதைச் சொன்னால் அதற்கு பேச வர மறுக்கிறார்கள். நாங்கள் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம் அது யாருக்கும் பாதகம் ஏற்படாது யாருக்கும் பாதகம் ஏற்படாது என்பது ஒரு ஆறுதல் சொல் தான் யாருக்கும் பாதகம் ஏற்படாமல் எப்படி சீரமைக்க முடியும் சீரமைப்பை தள்ளிப் போட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

இதில் ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என பிரித்தரலாம். பாரதிய ஜனதா கட்சி மோடி சொல்வது எல்லாம் ஆதரிக்கும் நாம் அனைத்தையும் எதிர்க்கிறோம் நடுநிலையாக இருக்கிறார்களே நடுநிலை என சொல்லிக்கொண்டு தள்ளாடிக் கொண்டிருக்கிறார்களே. அவர்களை தான் நம்ப முடியாது ஒருபுறம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர மாட்டோம் என்கிறார்கள். பின்பு பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசிய பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்தால் ஒன்றுமே பேசவில்லையே நாங்கள் ஒன்றுமே பேசவில்லை என்றால் எதற்கு சென்றீர்கள் அல்வா சாப்பிடுவதற்காக ஒன்றுமே பேசவில்லை என்றால் முக்கா மணி நேரம் எதிர்க்க எடுத்தீர்கள். தமிழ்நாட்டு குறைகளை சொன்னோம் தமிழ்நாட்டு குறைகளை சென்னையில் இருந்து தபால் போட்டால் ஏன் அவர் படிக்க மாட்டாரா தொலைபேசியில் பேசினால் பேச மாட்டாரா. திகழ்ந்த விழிப்பாக இருக்க வேண்டும். இன்று முதல் அடுத்த மே மாதம் வரை அடுத்த 13 மாதங்கள் விழிப்பாக தமிழ்நாட்டு மக்கள் இருக்க வேண்டும். நமது தனி தத்துவம் தமிழ் ஆங்கிலம் இவற்றுக்கெல்லாம் பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன மிகுந்த விழிப்போடு மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்

என பேசினார்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸ் நிர்வாகிகள் பீட்டர் அல்போன்ஸ் எஸ்.டி நெடுஞ்செழியன் தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி
வி ஆர் சிவராமன் தாம்பரம் நாராயணன் தீனதயாளன் விஜய் ஆனந்த் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.