• Sat. Apr 26th, 2025

ஆன்லைன் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தூக்கிட்டு தற்கொலை..,

ByPrabhu Sekar

Mar 28, 2025

சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன் (வயது-45) புனிதா (வயது-39) தம்பதி இருவருக்கும் திருமணம் ஆகி கடந்த 15 வருடங்கள் ஆகியுள்ளன இவர்களுக்கு 8,வயதில் மகளும், 12,வயதில் மகனும் உள்ளனர்,இதில் நடராஜன் தனியார் ஐடி கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்,

இந்தநிலையில் இவர்கள் வசித்து வரும் அடுக்குமாடி வீடானது வங்கி கடன் மூலம் வாங்கி மாத தவணை கட்டி வந்துள்ளனர்,மேலும் செல்போன் செயலிகள் மூலம் 10,லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளனர், இதையடுத்து செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்த தனியார் நிறுவனங்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்,

இதனால் இருவரும் நீண்ட நாட்களாக அதிக கடன் சுமையால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துள்ளனர் இதனால் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்,இந்தநிலையில் வழக்கம் போல் இருவரும் குழந்தைகளுடன் தூங்கச் சென்றுள்ளனர்,

காலை நடராஜர் எழுந்து பார்க்கும் பொழுது அவரது மனைவி புனிதா மட்டும் காணவில்லை இதையடுத்து மற்றொரு படுக்கை அறைக்குச் சென்று கதவைத் தட்டிய போது கதவு நீண்ட நேரமாக திறக்காமல் உள் பக்கம் தாழிட்டிருந்துள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறையில் புனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது

இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் கதரி அழுது உள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்,