• Thu. Mar 28th, 2024

டேன்டீ” யை நடத்த முடியவில்லையெனில் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்… அண்ணாமலை

“டேன்டீ” யை தமிழக அரசால் நடத்த முடியவில்லையெனில் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்……
கூடலூரில் அண்ணாமலை பேச்சு……
நீலகிரி, வால்பாறையில் உள்ள டேன்டீ தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூடலூர் சுங்கம் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது…
கூட்டத்தில் பேசிய அவர் கூடலூரில் நடைபெறுவது பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்பாட்டமா மாநாடா?? என்பதுபோல் உள்ளது இந்த கூட்டம்.முதன்முதலாக தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்று இலங்கையில் இருக்கக்கூடிய தலைமன்னார்க்கு அகதிகளாக கப்பலில் அழைத்து செல்லப்பட்ட போது ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர்.
பின்னர் சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் மீண்டும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக டேன்டீ என்பது குடியுரிமையுடன் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால் டேன்டீ நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக தமிழக அரசு 5315 ஏக்கரை வனத்துறைக்கு ஒப்படைப்பதாக கூறியிருப்பது வேதனையடையச் செய்துள்ளது.டேன் டீ யை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி ஒப்படைத்துவிடுங்கள். டேன்டி கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தல் நஷ்டத்தில் இயங்கும் நிர்வாகத்தை லாபத்தில் கொண்டு செல்வோம் என அப்படி கொண்டு சென்றால் தமிழக முதல்வர் தனது பதவி ராஜினாமா செய்வாரா என முதல்வருக்கு சவால் விடுவதாக கூறினார்.அதேப்போல் மின்சாரத்துறை லட்சம் கோடி கடனில் உள்ளது.,
ஆனால் டேன் டீ 218 கோடியில் மட்டுமே நஷ்டத்தில் உள்ளது மின்துறை வேண்டும் டேன்டீ வேண்டாமா, நான் நீங்களாக இருந்தால் 14 லட்சம் மதிப்பிலான வீடு தரப்படும் என்றது சொன்னதை ஏற்கமாட்டேன் என கூறினார்.
தமிழக வனத்துறை அமைச்சர் அவர் வீட்டு முன் பல ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். டாஸ்மாக் கடையில் Spring minaral Water கோபாலபுரத்திற்கு சொந்த தாயாரிப்பு, தமிழக முதலமைச்சர் டேன் டீ விற்பனையை இப்படி செய்தால் பல கோடி ரூபாய் வருவாய் டேன் டீ ஈட்டும்.எந்த ஒரு கட்சியிலும் சுயமாரியதை இல்லையென்றால் கட்சி வளராது விரைவில் தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் பலர் சட்டையை கிழித்தெறிந்து வெளியே வருவார்கள்.

இந்த அரசுக்கு நீலகிரி கூடலூர் மக்கள் மீது அக்கறை உள்ளது போல் காண்பிக்கிறது. ஊட்டியில் எந்த ஆக்கபூர்வ பணிகள் நடைபெறுவதில்லை.இந்தியாவில் பல அரசியல்வாதிகளில் 1,76,000 கோடி ஊழல் செய்து நெஞ்சை நிமிர்த்தி வருகிறார் ஆ.இராசா, சென்னையில் மழையின் போது தமிழக முதல்வர் லவ் டுடே படம் பார்த்துக்கொண்டு இந்த படத்தை நாம் தான் வாங்கியுள்ளோமா என தன் மகனிடம் கேட்கிறார்.

மக்களின் நிலைமை அவருக்கு தேவையில்லை.இலங்கைக்கு சென்று அவர்களுடன் இருந்து மக்களின் இன்னல்களை பார்த்து வந்துள்ளேன். தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட பொதுத்துறைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், டேன் டீ நிர்வாகத்தில் மட்டும் தான் தினக்கூலிகளாக தொழிலாளர்களை வைத்துள்ளது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இன்றும் குறைவான தினக்கூலி வழங்கப்படுகிறது. திட்டத்தினை மாற்றி அவர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
டேன் டீ யில் உள்ள அனைத்து தாயகம் தமிழர்களுக்கு அவர்கள் கோரிக்கையை ஏற்று அனைத்து வசதிகளை செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறது பா.ஜ.க எனவும்.ஜனவரி மாதம் முதல் மத்திய அமைச்சர்களுடன் நீலகிரியில் மக்கள் பிரச்சினைகளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளோம்,,தமிழக்தில் மக்களுக்கான பிரச்சினைகளை ஒவ்வொன்றுக்கும் பா.ஜ.க முன்னிற்கும் என கூறினார்.மேலும் அகதி என தனது அறிக்கையில் குறிப்பிட்டது தொடர்பாக கூடலூரில் பகுதி சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் அவர் அது குறித்து கூட்டத்தில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக அகதி என்ற வார்த்தையே அங்கும் அதிகம் பயன்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *