• Thu. Apr 25th, 2024

அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..

ByKalamegam Viswanathan

Mar 20, 2023

மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து 500க்கும் மேற்பட்ட தோழர்கள் இன்று காங்கிரஸில் இணைகின்றனர் இந்த நிகழ்ச்சிக்காக தற்போது மதுரை வந்துள்ளேன் தேசிய கட்சியை நோக்கி வருபவர்களை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
ராகுல் காந்தி அவர்கள் ஐரோப்பிய நாட்டிற்குச் சென்று ஜனநாயகம் பற்றி பேசியுள்ளார் ஜனநாயகம் வேண்டும் என்று பேசி உள்ளார் இந்தியாவின் பாரம்பரியம் ஜனநாயகம் என்று சொல்லியுள்ளார் இதனை பாரதிய ஜனதா கட்சி தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.அது குற்றமில்லை ஒரு உண்மை அப்படி சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை இருக்கிறது ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையை தவிர அளிப்பதல்ல.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம், அதற்கான அனுமதி இருந்தது ஆனால் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி இல்லை.நாடாளுமன்றத்தில் ஜி 20 சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் அரசியல் பேசக்கூடாது என ஜெய்சங்கர் அமைச்சர் கூறுகிறார் ராகுல் காந்தி அரசியல் பேசாமல் என்ன பேச வேண்டும்.
அவர் தேசியக் கட்சியின் தலைவர் அதானின் மீது குற்றச்சாட்டுகளை பேசினால் தேசத்திற்கு விரோதமாக பேசுகிறீர்கள் என்று சொல்லுகின்றனர்.அதானி தான் இந்தியாவின் தேசமா..? அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? ஒரு தனி நபர் இந்தியாவில் வியாபாரம் செய்வதை இந்தியா எதிர்ப்பதில்லை. இன்று பலர் செய்கின்றனர் அதற்கான உரிமை உண்டு..இந்தியாவின் பொது நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுக் கழகமும் ஸ்டேட் பேங்க்கும் அதானிக்கு சட்டத்திற்கு புறம்பாக மரபுகளை மீறி உதவி செய்திருக்கிறார்கள் அதை எப்படி செய்தார்கள் என்று தான் ராகுல் காந்தி கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது. அதானே இந்தியா அல்ல.
அதிமுக கட்சி பூசல் திமுக கூட்டணிக்கு வலு சேருமா..?
கூட்டணி என்பது தமிழகத்தில் மதசார்பற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை தாங்கின்ற கூட்டணி தான். அதிமுக கூட்டணி என்பது உடைத்த கண்ணாடி அண்ணாமலை என்ன சொல்கிறார் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தால் நான் பதவி விலகுவேன் என்று சொல்கிறார் அது எப்படி கூட்டணி ஆகும்.
அவர்கள் தனிநபர்களை மையமாக வைத்து கூட்டணி அமைத்துள்ளனர் நாங்கள் கொள்கைகளை மையமாக வைத்து கூட்டணி அமைத்துள்ளோம்.
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையை தமிழக அரசு எவ்வாறு கையாண்டது..
மிகச் சரியாக கையாண்டார்கள் தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள் அரசியல் நோக்கத்துடன் அவை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் எல்லோரும் வாழ்வதற்கு உரிமை உண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 2000 வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்ட இடம் தமிழகம்.
வட மாநிலத் தொழிலாளர்களின் தேவை தமிழகத்தில் இருக்கிறது அதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பணம் வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலை எனக்கில்லை என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு.
வேறு எதை வைத்து செய்வார் அவர் கூட்டும் கூட்டத்திற்கு எல்லாம் எப்படி வருகிறது அவரது சொல்லாற்றலுக்காக வருகிறதா அவரது கட்சியின் கொள்கைக்காக வருகிறதா அல்லது அவர்களுக்கு ஏற்கனவே அமைப்புகள் உள்ளதா பணம் கொடுத்து தானே அழைத்து வந்தார்கள்.
எதை வேண்டுமானாலும் பேசலாம் நடைமுறை என்று ஒன்று உள்ளது பணம் தேவை என்று நாங்க சொல்லவில்லை. நான் பணம் இல்லாமல் தான் பல தேர்தலில் நின்று உள்ளேன்.
பணம் இருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை அப்படி என்றால் இந்த நாட்டின் முதலமைச்சர் டாட்டா பிர்லா அம்பானி அதானி தான் வர வேண்டும் மன்மோகன் சிங் எப்படி வந்திருக்க முடியும் பணமும் ஒரு தேவையாக இருக்கலாம்..! பணம் மட்டுமே அரசியல் அல்ல அது ஒரு தவறான கருத்து.
திமுகவினர் இடையே உட்கட்சி பூசல் குறித்த கேள்விக்கு.
இங்கு வரும்போது கூட என்னை தள்ளிவிட்டு வந்தனர் அதற்காக எங்களுக்குள் பிரச்சனை என்று அர்த்தம் அல்ல ஆர்வத்தின் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் ஒரு அரசியல் கட்சியை பாதிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *