கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை திருமங்கலத்தையும், ஒத்தக்கடையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் கூறினார்.