• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலின் உண்மையிலேயே உத்தமராக இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

Byகாயத்ரி

Sep 15, 2022

திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட விழா. இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்று தெரிவித்தார். மேலும் திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்றும் தமிழகத்தில் கூட்டணி அமைக்காமல் பணம் கொடுக்காமல் தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். தேமுதிக தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்றும் எங்களை போன்ற மற்ற கட்சிகள் தனித்து போட்டியிட தயாரா என்றும் அவர் சவால் விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உண்மையிலேயே உத்தமராக இருந்தால் அவர் தங்களது அமைச்சரின் வீட்டில் ரெய்டு செய்யட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.