• Mon. Dec 9th, 2024

சசிகலாவை கிண்டலடித்த ஜெயக்குமார்

Byகாயத்ரி

Sep 15, 2022

என்னை மக்கள் ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்று சசிகலா கூறியதற்கு சசிகலா சிரிக்காமல் ஜோக் சொல்லுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

நேற்று மக்கள் மத்தியில் சசிகலா பேசிய போது மக்கள் என்னை ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்றும் அதிமுகவே ஒற்றுமைப்படுத்துவதே தனது வேலை என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா இருந்த அதிமுக போல் மீண்டும் கட்சி ஒன்றிணையும் என்றும் கூறியிருந்தார். மேலும் மக்கள் என்னை ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்றும் அவர்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ‘ஜெயலலிதாவாக என்னைப் பார்க்கிறார்கள் என கூறி சசிகலா சிரிக்காமல் ஜோக் சொல்கிறார் என்று கிண்டலடித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு அதிமுகவில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.