ராணிப்பேட்டை:திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏவி சாரதி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.வி.சாரதியின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்னதாக,அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த சாரதி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்நிலையில்,அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.