• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

வரும் ஜூன் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்….

Byகாயத்ரி

Jun 10, 2022

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பி ஏ.4, பி ஏ 5: வகை புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை தொற்று தீவிர பாதிப்பு இல்லை என்றாலும் அதனை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர், மதுரை, ஈரோடு, தஞ்சாவூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதையடுத்து நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடித்தால், பரி சோதனை நடவடிக்கைகள், சிகிச்சை நடைமுறைகள், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட உத்திகளை கையாளுவதை மாவட்ட நிர்வாகங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற ஜூன் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.