• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

நல்ல படம் தருவேன்! – விஜய் பட இயக்குனர்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது! இந்நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாகவும், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த வம்சி ” தளபதி66 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது, விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது, என்னால் முடிந்த அளவு சிறப்பாக ரசிகர்களை பிடித்த வாறு நல்ல படம்மா கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.