பிக்பாஸ் அல்டிமேட்டில் வந்து உடனேயே அட்டகாசமாக பேசி, அசத்தியிருக்கிறார் சிம்பு.. இது சிம்பு ரசிகர்களை மட்டுமல்ல, பிக்பாஸ் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ம் தேதி துவங்கப்பட்டது. 14 போட்டியாளர்களுடன் ஓடிடி வெர்சனாக 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. 10 வாரங்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ளது.
இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் எவிக்ஷன் மூலம் வெளியேறிய நிலையில், வீட்டில் நடந்த சில பிரச்சனைகளால் மன அழுத்தம் காரணமாக வனிதா விஜயக்குமாரும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து வெளியேறி சென்றார். இதற்கிடையில் விக்ரம் பட ஷுட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்தார். அவருக்கு பதில் சிம்பு இனி பிக்பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்ததுமே நேரடியாக மேடைக்கு வந்து பார்வையாளர்களை சந்திக்காமல், வீட்டிற்குள் ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரச் சொல்லி பேசினார். இனி கேம் ஃபன்னாக இருக்க வேண்டும் என அனைவரிடமும் வாக்குறுதி கொடுக்கும் படி போட்டியாளர்களிடம் கேட்டார் சிம்பு. போட்டியாளர்களும் அவர் தான் அடுத்த ஹோஸ்ட் என்பதை ஏற்கனவே கணித்து விட்டதாக கூறினர்.
போட்டியாளர்களை சந்தித்த பிறகு பிக்பாஸ் அல்டிமேட் மேடைக்கு வந்த சிம்பு, கமலை பற்றி பேசினார். பிக்பாஸ் மியூசிக்கை கேட்டதுமே எல்லோருக்கும் நினைவில் வரும் ஒரே நபர் கமல் சார் தான். கமல் சாருக்கு பதில் நான் இங்கு வரவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாமல் போனது. அவர் மீது கொண்டு மதிப்பு காரணமாகவும், எனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும் என்பதால் தான் இதற்கு வந்தேன் என்றார்.