• Fri. Apr 19th, 2024

என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு

ByKalamegam Viswanathan

Mar 26, 2023

30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் திருப்பி என் ஊருக்கு வந்து, என் மக்களுக்கு என்னால் என் முன்னோர்கள் பாதையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை நான் வரமாக கருதுகிறேன். -நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:
அரசுப் பள்ளியில் படித்த முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கி கல்லூரியில் சேர திட்டம் கொண்டு வந்தோம் அந்த வகையில் சென்ற ஆண்டு சுமார் 25 ஆயிரம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. வசதி இல்லாததால் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேராதவர்கள் திட்ட மூலம் கல்லூரி படிப்பை தொடர்ந்துள்ளனர்.
பெண்கள் பட்டம் பெற்ற பிறகு சிறு கூறு தொழில் துவங்குவதற்கு சில இடையூறுகள் உள்ளது. எனவே அதையும் திருத்துவதற்கு அரசாங்கம் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் தொகையில் ஆறு சதவீதம் இருக்கும் தமிழகத்தில் உற்பத்தி தொழிலில் உள்ள மகளிரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 40 சதவீதம் பேர் உள்ளனர்.நான் மூன்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் நான்கு பட்டங்கள் பெற்றுள்ளேன் ஆனால் ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு கூட நேரில் செல்லவில்லை தபால் மூலமாகத்தான் பட்டங்களை பெற்றுக் கொண்டேன்.
30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு அனுபவங்கள் பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் திருப்பி என் ஊருக்கு வந்து, என் மக்களுக்கு என்னால் என் முன்னோர்கள் பாதையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை நான் வரமாக கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *