• Fri. Apr 26th, 2024

ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணா

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரி
கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.
தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியின் அறிவிப்பை அடுத்து குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி தேசப்பிதா காந்தி சிலையின் முன்பு. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில்.ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பிரதமர் மோடி.ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்), கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார் முன்னிலையில்.மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர்.பினுலால் தலைமையில்.காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஆண்,பெண் என தக்கலை காவல் நிலையம் அருகில்.பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற செயலாளர் ஆகியோரை கண்டித்து நடத்தும் கண்டன ஆரப்போராட்டம் காலை 10_மணிக்கு தொடங்கியது மாலை 5_மணி வரை நடைபெறவுள்ளது.

தக்கலை கண்டன ஆரப்போராட்டத்தின் நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்.பிரின்ஸ் மற்றும் ஆர்.ராஜேஸ்குமார். மோடிக்கு அவரே அவர் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட செயலுக்கு குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள் என பேசியதும்.சூரத் நீதிமன்றம் ஜாமீன் மனு செய்ய 30_நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற செயலாளர் என மூவரும் சேர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கியது அப்பட்டமான விதி மீறல் என கண்டன கோசம் எழுப்பினார்கள். ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பிரதமர் மோடி யின் இத்தகைய செயல். இந்தியா மட்டும் அல்ல அமெரிக்கா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளது தான்.இந்தியாவிற்கு மோடியால் ஏற்பட்டுள்ள அவமானம் எனவும் பேசியவர் மேலும் இந்த வழக்கில் மோடியால் ஏற்றுக்கொள்ள முடியாத நீதிமன்ற தீர்ப்பு வரும்.அதன் எதிரொலியாக.கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *