• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நான்தான் அடுத்த மதுரை ஆதீனம்… நித்யானந்தா சார்பில் மனுத்தாக்கல்..!

Byவிஷா

Nov 2, 2023

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தாம் தான் அடுத்த மதுரை ஆதீனம் எனவும் நித்தியானந்தா சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு இந்திய மாநிலம், கர்நாடகாவில் பிடதியில் தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நித்யானந்தா அமைத்திருந்தார். அதன் பின், தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்திருந்தார். அங்கு, அவருடைய பக்தரும், நடிகையுமான பெண் ஒருவருடன் அவர் இருக்கும் அந்தரங்க வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, 292 -வது மதுரை ஆதீனம் அருணகிரிநாத தேசிகர், தனது இளைய ஆதீனமாக கடந்த 2012 -ம் ஆண்டு நித்தியானந்தாவை அறிவித்தார். அதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததால் அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை ஆகியவற்றை அறிவித்தார்.
இந்நிலையில், மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தாம் தான் அடுத்த மதுரை ஆதீனம் எனவும் நித்தியானந்தா சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்க மதுரை ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.