• Tue. Apr 30th, 2024

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏமன்..!

Byவிஷா

Nov 2, 2023

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏமன் களமிறங்கியதுடன், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளதாகவும் ஹவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையேயான போரில் காஸாவில் 8,796 பேர், இஸ்ரேலில் 1,400 பேர் உட்பட மொத்தம் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏமன் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள், இஸ்ரேலுக்கு எதிராக பல ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை அனுப்பி தாக்குதலை தொடங்கியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை இது தொடரும் என்றும் ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரீ கூறுகையில்,
‘எங்கள் ஆயுதப்படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள இஸ்ரேலிய எதிரிகளின் பல்வேறு இலக்குகளில் ஏராளமான பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஏராளமான டிரோன்களை ஏவியது. பாலஸ்தீனத்தில் ஒடுக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு ஆதரவான மூன்றாவது நடவடிக்கையாகும்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *