இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப்போற்று. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருப்பார். இத்திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. சூரரைப் போற்று கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தை இந்தியில் தற்போது ரீமேக் செய்து வருகிறார்.
இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சுதா கொங்கரா அதில் நடிகை ஊர்வசியோட மிகப்பெரிய ரசிகை நான் என பூரித்து கூறியுள்ளார். மேலும் துரோகி படத்திலேயே ஊர்வசியை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார் அப்பொழுது ஊர்வசி கர்ப்பமாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது இருப்பினும் அம்மா கதாபாத்திரத்திற்கு ஊர்வசி டப்பிங் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து சூரரைப்போற்று படத்தில் ஊர்வசி சூர்யாவுக்கு அம்மாவாக எக்ஸ்ட்ராடினரியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றார்.