• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

யுவனை புகழும் எஸ் ஜே சூர்யா! எதற்காக?

வாலி,குஷி, நியூ என வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, மாநாடு பட வெற்றியை தொடர்ந்து தற்போது ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முழுநேர நடிகராக மாறியுள்ளார்.

தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ் ஜே சூர்யா பொம்மை படம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பொம்மை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அப்படத்தின் பிஜிஎம் பெருமளவு பேசப்படும் அதேபோல பொம்மை படமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உலகத்தரத்தில் இருக்கும் என எஸ் எஸ் சூர்யா நம்பிக்கையாக தெரிவித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை பொம்மை படத்தில் ரத்தமும் சதையுமாக இருக்கும் கட்டாயமாக இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.