மதம்மாறி திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நபருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். .
இச்சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும் , “சூரூர்நகர் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்தப் பெண் விருப்பப்பட்டு நாகராஜுவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் தலையிட பெண்ணின் சகோதரருக்கு உரிமையில்லை. பெண்ணின் கணவரை அவர் கொலை செய்தது அரசியல் சாசனப்படி கிரிமனல் குற்றம் என்றால் இஸ்லாமிய சட்டத்தின்படி மிக மோசமான கிரிமினல் குற்றமாகும். குற்றஞ்சாட்டப்பட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனாலும், சம்பவத்திற்கு வேறு நிறத்தை சிலர் பூசுகின்றனர். கொலைகாரர்களுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோவதில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.