மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 500 க்கும் பட்ட ஆண், பெண் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது!
உண்ணாவிரத போராட்டம் கோரிக்கையாக, பெரியாறு அணை நீர் கொள்ளளவை 142 அடியாக உறுதிப்படுத்த, 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு பேபி அணையை பயன் படுத்தும் பணியை துவங்கு, பெரியார் அணை அதிகாரம் முழுமையும் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும், பேபி அணை பலப்படுத்த கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல சாலை அமைக்கும் பணியை துவங்க வேண்டும், தமிழக பொறியாளர்கள் அணைப் பகுதியில் தங்கி பணியாற்றுவதை உறுதிப்படுத்த, தமிழன்னை படகு போக்குவரத்தை இயக்க வேண்டும், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும், புதிய அணை திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும், மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் துவங்கிட வேண்டும் ரூல்கர்வ் முறையை அனுமதிக்காதே, அணை நீர் சேமிப்பு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கார் பார்க்கிங் சொகுசு விடுதிகள் அகற்றிட வேண்டும் ஆகிய 12 கோரிக்கைகளை முன்வைத்து 27 மாவட்டத்திலிருந்தும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், திமுக ஆட்சியில் தான் அதிகமாக பெரியாறு ஆணையின் உரியை இழந்துள்ளோம், திமுக அரசு கூட்டணி கட்சிக்காக பார்த்து பெரியாறு உரிமையை இழந்துவிட கூடாது, உடனடியாக இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் தெருவில் இறங்கி போராடுவோம் என்றார்.