
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பிரியா, 10ம் வகுப்பு மாணவி திவ்யா, 7ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஆகிய மூவரும் தாங்கள் சந்தித்த அவமானங்களை இணையதளம் ஒன்றில் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவியரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பேசினார்.
அப்போது “மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின் தாங்கள் வசித்து வரும் ஆவடி நரிக்குறவர் காலனியை மேம்படுத்த வேண்டும். தங்களது கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் மாணவியர் வேண்டுகோள் விடுத்தனர். அதனை கேட்டுக் கொண்ட முதல்வர் மாணவியருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
