• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இல்லத்தரசிகள் ஷாக்! இதுவரை இல்லாத வகையில் விலை உயர்வு

ByA.Tamilselvan

Apr 5, 2023

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் விலை உயர்ந்துள்ளதால் இல்லதரசிகளும், திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ள குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் உள்ளனர்
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 90 ரூபாய் உயர்ந்து, ரூ.5,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, ரூ.45,520-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,587-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 74 ரூபாய் உயர்ந்து, ரூ.4,661-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,900 ரூபாய் உயர்ந்து, ரூ.80,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.