• Mon. Dec 9th, 2024

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை..!

Byவிஷா

Apr 11, 2023

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இரக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்தது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 44 ஆயிரத்து 800 க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து, ரூ. 80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5.600ஆக விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் உயர்ந்து ரூ.80.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.