• Sat. Apr 20th, 2024

இந்திய ஜவுளி துறையில் தமிழகம் வெற்றி வாகை சூட வழிவகை செய்யும் தமிழக அரசு

இந்திய ஜவுளி துறையில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி துறையில் பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இதில் பெரும் பங்கு நெசவுத் தொழிலுக்கு முதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் ஜவுளி துறையில் மகாராஷ்டிரா முதன்மை மாநிலம் அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மாநிலம் திகழ்ந்து வருகிறது.தற்போதைய அரசு பதவி ஏற்ற உடன் தமிழக ஜவுளி துறையை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மேல்நோக்கி செல்ல பல திட்டங்களை வகுத்து அதனை அமல்படுத்தும் விதமாக கடந்த 2022 சட்டமன்ற நிதித்துறை அறிக்கையில் ஜவுளித்துறை மேம்படுத்துவதற்காகதமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, தமிழக கைத்தறி மற்றும் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி,நிதியமைச்சர்அறிவிப்பின்படி 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து,தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவு சார்ந்த உபகரணங்களின் கணக்கெடுப்பு மற்றும் ஜவுளி துறையினர் எவ்வாறு உலக வர்த்தகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக இ-காமர்ஸ் என்னும் செயலி மூலம் வர்த்தகத்தை பெருக்க இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ வழிவகை செய்துள்ளார்கள்.
கணக்கெடுப்பு என்பது தமிழகத்தில் உள்ள விசைத்தறி கைத்தறி மற்றும் பல தரப்பட்ட நாடா இல்ல தானியங்கி தறிகள் எவ்வளவு உள்ளது அதன் மூலம் எத்தனை தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று அதன் மூலம் அவர்களின் பொருளாதாரம் நிலை குறித்தும் மேலும் இதன் மூலம் அரசு கொடுக்கும் அனைத்து திட்டம் மற்றும் மின் மற்றும் இதர மானியங்கள் ஆகியவை தகுதியான தகுந்த ஜவுளித்துறை நபர்களுக்கு எவ்வித தவறுகள் இல்லாமல் பயனடைய வழிவகை செய்யும்.அதனைத் தொடர்ந்து நாம் உற்பத்தி செய்யும் துணிகளின் தன்மை அதனை எவ்வாறு மேம்படுத்துவது அல்லது துணிகளை மேம்படுத்துவதற்கான டையிங்,processing, printing மற்றும் கார்மெண்ட்ஸ் போன்ற ஜவுளி தொழில்களின் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வழிவகை செய்யும்.


அதேபோல் ஜவுளி தொழில் பெரும் சவாலுக்கு உண்டான இயற்கை பருத்தி மற்றும் நூல்களின் விலை செயற்கை வியாபாரம் மூலம் ஏற்றம் இறக்கம் ஏற்படுவதன் மூலம் ஜவுளி தொழில் நெசவாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தில் தொழில் செய்து வருவதால் அதனை தவிர்க்கும் அல்லது செயற்கை வியாபாரத்தை நிறுத்தும் விதமாக தமிழகத்தில் உற்பத்திக்கு தேவையான இயற்கை பருத்தி எவ்வளவு உற்பத்தி உள்ளது.மேலும் எவ்வாறு பருத்தி உற்பத்தினை தமிழகத்தில் நமது தேவைக்கு ஏற்ப பெருக்குவது அதனை எத்தனை தொழிற்சாலைகளில் ஜின்னிங் செய்யப்பட்டு அதன் பின் எத்தனை நூற்பாலைகளில் நூலாக தயாரிக்கப்பட்டு வருகின்றன என்ற தகவலும் அதே போல் செயற்கை நூல் மூலம் தயாரிக்கப்படும் துணிகளின் அளவுகோல் அறிந்து அதனின் மூலப்பொருளான நூல் உற்பத்தி , அதன்பின் நூலை டையிங் , டபிளிங் தொழிற்சாலை மூலம் ஏற்படுத்தி விற்பனை தொடர்பான தகவலும் பதிவு செய்யப்படும்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காடா துணிகள் அதனை மேம்படுத்துவதற்காக பெரும்பாலும் வட மாநிலங்கள் சென்று Dying, processing & printing செய்யப்படுவதால் ,தமிழகத்திற்கு வரவேண்டிய வரிகள் அனைத்தும் தடைப்பட்டும் மேலும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு , பொருளாதாரத்தை பாதிக்க வைக்கிறது.
இதனால் தமிழகம் ஜவுளித்துறையில் முன்னோக்கி செல்ல தடையாக உள்ள காரணத்தால், கணக்கெடுப்பு மூலம் தமிழக ஜவுளித்துறைக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி இந்தியாவிலேயே முன் உதாரண மாநிலமாக செயல்படுத்த வழிவகை தமிழக அரசால் சிறப்பாக செயல்பட திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.


இ – காமர்ஸ்
உலக ஜவுளி துறையில் இந்தியா எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் என்பதனை தமிழக அரசு முதல்முறையாக
இ-காமர்ஸ் என்னும் செயலி திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாக இருப்பதின் பயனாக வருங்காலத்தில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் உலக வர்த்தகத்தில் விற்பனை செய்யவும் மற்றும் நாம் உற்பத்தி செய்யப்படும் துணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் தெரியப்படுத்தி அவர்கள் நேரடியாக நமது நெசவாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களே தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான துணிகளை எவ்வித இடைத்தரவு இல்லாமல் அரசின் வழிகாட்டுதல் படி பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்படும்.
அதேபோல் உலக மக்களின் தேவைக்கேற்ப அவர்களின் நாகரிக வடிவமைப்பிற்கு ஏற்ப நமது தமிழக ஜவுளித்துறையினர் தங்கள் ரகங்களை உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டு இதன் மூலம் தமிழக ஜவுளித்துறையில் நஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லாமல் தொழில் செய்ய இத்திட்டம் பேரு உதவியாக இருக்கும் என்பதால் கடந்த ஆறு மாதமாக திட்டம் தொடர்பாக தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் முன்னிலையில் தமிழக கைத்தறி துறை ஆணையர் மேற்பார்வையில் திட்டம் எவ்வாறு செயல்படுத்துவது என்று ஆராய்ந்து அதற்குண்டான துறை சார்ந்த அதிகாரிகள் கணினி , தொழில்நுட்ப சார்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உடன் பல கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று ,அதனை செயல்படுத்தும் முதல் விதமாக DPR அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டு அதன் பின் அதன் தன்மையை தகுந்த அனுபவமிக்க ஆலோசகர்கள் மூலம் மேம்படுத்தி வெகு விரைவில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்திட்டம் அமல்படுத்திய மூன்று வருடத்திற்கு மட்டும் நெசவாளர்களுக்கு தங்கள் தகவல்களை பதிவு செய்து கொள்ள இலவசமாக வழங்க வேண்டும் என்றும் மேலும் நுகர்வோர்கள் திட்டத்தினை ஒரு வருட காலத்திற்கு இலவசமாக பயன்பெற வேண்டும் என்றும் அதன் பின் அதற்குண்டான சந்தாவை பெற்றுக் கொண்டு சீரிய முறையில் ஜவுளித்துறை இந்தியாவிலேயே தமிழகம் முதன் மாநிலமாக அடியெடுத்து வைத்து வெற்றி வாகை சூட காலம் வெகு விரைவில் காத்திருக்கிறது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *