
மதுரை மாவட்டம் சோழவந்தான் கள்ளர் தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெறி நாய் சுற்றித்திரிந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் கூறிவந்த நிலையில் வெறி நாயை பிடிப்பதற்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சோழவந்தான் கள்ளத்தெருவில் வசிக்கும் பாண்டியம்மாள் வயது 55 தள்ளு வண்டியில் சிறு வியாபாரம் செய்து வருபவர் இவர் தனது வீட்டில் இருந்தபோது அந்த வழியாக வந்த வெறிநாய் பாண்டியம்மாளின் வீட்டிற்குள் புகுந்து பாண்டியம்மாளில் கை தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து வீட்டுக்குள் இருந்த பாண்டியம்மாள் அலறி அடித்து தெருவில் ஓடி வந்துள்ளார். பின்னர் பாண்டியம்மாளை கடித்துவிட்டு தெருவில் வந்த வெறிநாய் அங்கிருந்த பாலா என்பவரின் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மோட்சிகா என்ற ஆறு வயது சிறுமியையும் கடித்துக் குதறி உள்ளது. அதனைத் தொடர்ந்து வளையல் கார தெருவை சேர்ந்த ரவி என்பவரும் வெறிநாய் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதனை அடுத்து வெறிநாய் கடித்ததில் படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அருகில் இருந்த சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சோழவந்தான் பகுதியில் வெறிநாய் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வீட்டிற்குள் இருந்த55 வயது பெண் மற்றும் ஆறு வயது சிறுமியை வெறிநாய் கடித்ததில் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
