இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் குதிரைவால். கலையரசன், அஞ்சலி பாட்டில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வரும் இந்த படம், மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்த மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் 18ல் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.