• Thu. Feb 13th, 2025

கோர விபத்து – குழந்தை உள்பட 9 பேர் பலி..!!

ByA.Tamilselvan

Jan 19, 2023

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை – கோவா நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 19) அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானார்கள்.
அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில்லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. சக வாகனவோட்டிகள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை மூன்று பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த அனைவரும் உறவினர்கள் என்பதும் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள குஹாகருக்கு வேனில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் சோம்நாத் கார்கே கூறுகையில், இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை விசாரணை நடத்திவருகிறோம். லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளோம். இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள், 5 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். 4 வயது சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.