ஒரு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. மெல்லியதாக காற்றி வீசிய பொழுது, அதில் ‘அமைதி’ என்கிற முதல் மெழுகுவர்த்தி ஐயோ! காற்று வீசுகிறதே என்று பயந்து நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாகச் சொன்னது. காற்று வீசியதும் அணைந்து விட்டது. ‘அன்பு’ என்னும் அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்கொள்ள முடியாமல் அணைந்து விட்டது. ‘அறிவு’ என்னும் மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்கொள்ள முடியாமல் அணைந்தது.
“நம்பிக்கை” என்னும் நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய பொழுது அதனுடன் போராடி ஜெயித்து விட்டது. அப்பொழுது அந்த அறையினுள் சிறுவன் நுழைந்தான். அடடா! மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்து விட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது. வருத்தப்படாதே என்னை வைத்து அந்த மூன்று மெழுகுவர்த்திகளையும் பற்ற வைத்துக் கொள் என்றது. உடனே, அந்த சிறுவன் என் பெயர் என்ன என்று கேட்டான். அதன் பெயர் என்னவாக இருக்கும் என்று யூகிக்கிறீர்கள். ஆம்! நீங்கள் யூகித்ததைப் போல. அந்த நான்காவது மெழுகுவர்த்தியின் பெயர் “நம்பிக்கை”.
நம்முடைய வாழ்விலும் சூழ்நிலைகள் மாறும் பொழுது, கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சந்திக்கும் பொழுது, நாம் நமது “நம்பிக்கையை” மட்டும் இழந்து விடக்கூடாது. ஆபத்து காலத்தில் சோர்ந்து போகக் கூடாது. நாம் “நம்பிக்கையுடன்” இருக்க வேண்டும். நம்முடைய பாதைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது.
நம்பிக்கை!..
