

புளியங்குடியில் சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை கைது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதிகள் சோலார் மற்றும் சோலார் மின் கம்பம் திருட்டு போனது சம்பந்தமாக புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரத்லிங்கம், யோபு, சம்பத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது சிந்தாமணி சான்றோர் மடத்து தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் நாடார் மகன் ஆனந்த் (31)என்பது தெரியவந்தது. ஆனந்தை கைதுசெய்து விசாரித்தபோது தாம் செங்கல் சூளை நடத்தி வருவதாகவும் அந்த செங்கல் சூளையில் சோலார் விளக்குகள் பொருத்துவதற்காக திருடிய தாகவும் கூறியுள்ளார். மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் நாட்டாமை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் புளியங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
