• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்! – சுஹாசினி

இந்தி ஒரு நல்ல மொழி. இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களிடம் பேச இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது என பேசி இருந்தது கடும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து இந்தி மொழி தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் திரைப்பட நடிகையும், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி நகைக்கடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும். எல்லாரும் எல்லா மொழியையும் சமமாக நினைக்க வேண்டும். இந்தி ஒரு நல்ல மொழி. இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களிடம் பேச இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.