நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்துவருகிறார். தமிழில் இவர் நடித்த சாணிக்காயிதம் வரும் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் அவர் நடித்திருக்கும் சர்காரு வாரி பாடா வருகிற 12ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் குறித்து பேசுகையில், “காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்துவிட்டது. தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்துவிட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார்.
இருந்தாலும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். இந்தப் படத்தில் கலாவதி என்ற வேடத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள படங்களில் நடித்திராத வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறேன்” என்றார்.
