• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் ரயில் நிலையம், தபால் நிலைய ஹிந்தி எழுத்து அழிப்பு. வழக்கறிஞர் கைது..,

ByKalamegam Viswanathan

Jul 25, 2026

நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசைக் கண்டித்தும் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்தில் இடம்பெற்றிருந்த ஹிந்தி பெயர் பலகையில் இருந்த இந்திஎழுத்துக்களைஅழித்ததாக கூறப்படும் வழக்கில், சோழவந்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் யுவராஜ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தெரிவித்ததாவது, சோழவந்தான் ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்தில் ஹிந்தி மொழியில் இடம்பெற்றிருந்த பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி வழக்கறிஞர் யுவராஜை சோழவந்தான் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட யுவராஜ், நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்திலும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.