• Wed. Mar 22nd, 2023

இந்தி இனி தேசிய மொழி அல்ல! – தென்னிந்திய நடிகர்!

கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் “பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள். அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என தெரிவித்திருந்தார்.

சுதீப் பேசியதற்கு நடிகர் அஜய்தேவ்கன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “உங்கள் கருத்துப்படி இந்தி மொழி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் கன்னட படங்களை டப் செய்து இந்தியில் ஏன் வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தேசிய மொழி. ” என இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த சுதீப்” இந்தியில் நீங்கள் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. இந்தி மொழியை நாம் அனைவரும் நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா.?” என பதிலளித்துள்ளார்.

அதற்கு அஜய் தேவ் கான் ” நீங்கள் என் நண்பர். நான் தவறாக புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. எப்போதும் நமது துறை ஒன்று என்றே நான் கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *