• Fri. Apr 26th, 2024

கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போகிறாரா எலான் மஸ்க்?

ட்விட்டர் முழுக்க ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய விவகாரம்தான் ட்ரெண்ட். இந்த ஆச்சர்ய அலை ஓய்வதற்குள் எலான் மஸ்க் அடுத்து தான் வாங்கப் போகிற கம்பெனி குறித்து ட்வீட் செய்திருக்கிறார்.

எஸ்சைட் ஆகாதீங்க மக்களே. சர்காஸ்டிக் ஆகதான் பதிவிட்டு இருக்கிறார் எலான்.

எலான் ட்விட்டரில் “நான் அடுத்து கோகோ-கோலா வாங்கவுள்ளேன் மீண்டும் கொக்கைன் சேர்க்க” என பதிவிட்டு உள்ளார். கோகோ கோலா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் உட்சேர்க்கை பொருட்களில் கோகோ இலைகள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கொக்கைன் தன்மை நீக்கப்பட்ட கோகோ இலைகளை தயாரிப்பில் பயன்படுத்தத் தொடங்கினர். கோகோ இலைகளில் இருந்து தான் போதை பொருளான கொக்கைன் தயாரிக்கப்படுகிறது.

1885 அட்லாண்டாவை சேர்ந்த மருந்தாளுனர் John Pemberton கோகோ கோலாவை மருந்தாகத் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். கடுமையான தலைவலி, வயிற்று வலி உள்ளிட்டவற்றுக்குத் தீர்வாக இது கொண்டு வரப்பட்டது. கொக்கைன் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருள். “1894-ல் விற்கப்பட்ட கோகோ கோலாவில் 3.5 கிராம் கொக்கைன் இருந்தது. அதை மீண்டும் கொண்டு வாங்க” என ஒருவர் கமென்ட் செய்திருக்கிறார்.

எலான், “நான் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை வாங்கி ஐஸ் கிரீம் மெஷின்களை சரி செய்ய போகிறேன்” என ஏற்கெனவே பதிவிட்டிருந்ததை மீண்டும் பகிர்ந்து “கவனியுங்கள், என்னால் அதிசயங்கள் நிகழ்த்த முடியாது” என ட்வீட் செய்திருக்கிறார்.கள நிலவரம் என்னவென்றால் கோகோ கோலாவின் சந்தை மதிப்பு 284 பில்லியன் டாலர்கள். எலானின் நிகர மதிப்பாக சொல்லப்படுவதே 269 பில்லியன் டாலர்கள்தான். ஆனாலும் இவரை நம்ப முடியாது. 2017-ல் ட்விட்டர் என்ன விலைன்னு கேட்டுட்டு 5 வருடங்களுக்கு பிறகு அதனை வாங்கவும் செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *