• Thu. Jul 30th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

3 ஆண்டுகளாக வாடகை கொடுக்காததால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு பூட்டு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வந்த நெடுஞ்சாலை துறை குந்தா தாலுகா பிரிவு அலுவலகம் மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்ட புகார்களை மனுக்களாக அலுவலகத்தில் வழங்கி வருகின்றனர். தற்பொழுது மூன்று ஆண்டு காலமாக கட்டிடத்திற்கு வாடகை செலுத்தப்படாததால் கட்டிட உரிமையாளர் பலமுறை வாடகை பாக்கி கேட்டும் வழங்கப்படாததால் பொறுமை இழந்த கட்டிட உரிமையாளர் பூட்டப்பட்டிருந்த நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு கூடுதலாக தான் வாங்கி வந்த பூட்டினை பூட்டிவிட்டு சென்றார்.
இதனால் கடந்த ஒரு மாத காலமாக நெடுஞ்சாலை துறை அலுவலகம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.