• Thu. May 2nd, 2024

உதகையில் மாற்றுத் திறனாளிகள் விழா

முதுமலை புலிகள் காப்பகுதியில் உள்ள யானை பாகங்களுக்கு தாய்லாந்து நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உதகையில் வனத்துறை அமைச்சர் தகவல்…
உதகையில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று உதகையில் உள்ள சர்வதேச மருந்தாக்கள் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்
கா. ராமச்சந்திரன் கலந்து கொண்டு இணைப்பு சக்கர ஸ்கூட்டர், திருமண உதவித்தொகை காதொலி கருவி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல் போன்றவை சுமார் 90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானை பாகங்கள் மற்றும் கோவை பகுதியில் உள்ள யானை பாகங்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் குளத்தை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இமயமலை பகுதிகளில் காணப்படும் பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் தற்போது இங்கு நிலவும் கால நிலைக்கு ஏற்ப உணவு தேடி இடம் பெயர்ந்து வருவதால் 7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு பறவைகள் சரணாலயமாக மாற்றும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி அம்ரீத் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *