• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்- கேரள வாலிபர் கைது

ByA.Tamilselvan

Oct 6, 2022

மும்பை விமான நிலையத்தில் ரூ80 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய சம்பவத்தில் கேரளவாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில்விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த வாலிபரின் டிராலி பேக்கை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 16 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.80 கோடி ஆகும். இதனை கடத்தி வந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பினு ஜான் என தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.