தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பியில் நம்பர் ஒன் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இன்று இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது.
தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பமாக உள்ளது. இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நடிகர் வருண், நடிகை பவானி ரெட்டி, நதியா சிங், சின்ன பொண்ணு, கான பாடகர் இசைவாணி, அபினவ் வாட்டி, தொகுப்பாளினி பிரியங்கா, கோபிநாத் ரவி, மிலா, அபிஷேக் ராஜா, மதுமிதா, ராஜு ஜெயமோகன், ஸ்ருதி ஜெயதேவன், கோபிநாத், நிழல்கள் ரவி, பிரீத்தி சஞ்சீவ், நிருப் நந்தகுமார், அக்ஷரா ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.