• Thu. May 2nd, 2024

சேலத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கரவாகன பேரணி..!

சேலத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் தனியார் மருத்துவமனை மற்றும் காவல்துறை சார்பில் தலைக்காயம் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. சேலம் மூன்று ரோடு பகுதியில் தொடங்கிய இந்த இருசக்கர வாகன பேரணியை மாவட்ட காவல் துணை ஆணையாளர் மாடசாமி தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி மூன்று ரோடு, 5 ரோடு அழகாபுரம் வழியாகச் சென்று கூட்டுறவு மண்டபத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களிடம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதாரத்திலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதால் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியம் எனவும், சேலம் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *