• Fri. May 3rd, 2024

குமரியில் பெண்கள் பாதுகாப்பிற்கு..,
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் புதிய செயல்பாடு..!

குமரியில் பெண்கள் பாதுகாப்பிற்கு பெண் காவல்துறை அதிகாரி தலைமையிலான, முழுவதும் பெண் காவலர்களைக் கொண்ட அதிடிப் படையை உருவாக்கியுள்ளார் மாவட்டக் கண்காணிப்பாளர்.
தமிழகத்தில் சிறிய மாவட்டங்களில் நீலகிரிக்கு அடுத்து சற்று பெரிய மாவட்டம் கன்னியாகுமரி. குமரி சிறிய மாவட்டமாக இருந்தாலும் குற்றங்கள் குறைவாக நடக்கிறதா என கேள்வி எழுப்பினால்.? விடை மற்ற மாவட்டங்களுக்கு இணையாக பல்வேறு, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு குற்ற செயல்கள் தினமும் புதிது, புதிதாக குற்றங்கள் நடக்கும் நிலையில், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.என்.ஹரி கிரன் பிரசாத்.இ.கா.ப.,வின் புதிய முயற்சியாக, குமரியில் பெண்களின் பாதுகாப்புக்கு என பெண் காவல்துறை அதிகாரி தலைமையில் முழுவதும் பெண் காவலர்களை கொண்ட அதிரடி படையை உருவாக்கியுள்ளார்.
இந்த பெண் காவலர்களை கொண்ட அதிரடி படை, பெண்கள் கூடும் இடங்கள் குறிப்பாக கோவில் திருவிழா நடக்கும் இடங்கள், சந்தைபகுதி, காலை, மாலை நேரங்களில் பேரூந்து நிலையங்கள்.பெண் கல்லூரி பகுதிகள், பெண்கள் மட்டுமே நடத்தும் போராட்டப் பகுதிகள். குறிப்பாக செயின் பறிப்பு ஆண், பெண் திருடர்களை கண்காணிப்பது என்ற நிலையில் குமரியில் முழுக்க, முழுக்க பெண் காவலர்களை கொண்ட அதிரடி படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் காவலர்களை கொண்ட அதிரடி படை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தின் நேரடி பார்வையில் செயல்படுகிறது. இந்த புதிய முயற்சி பற்றி பெண்கள் மட்டுமே பயிலும். குமரியில் உள்ள புனித சிலுவை கல்லுரி முதல்வர் அருட்சகோதரி, பெண் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர், ஐயப்பா பெண்கள் கல்லூரி முதல்வர் இடம் கருத்து கேட்ட போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த புதிய முயற்சியை முழுமையாக வரவேற்று நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *