• Sat. Apr 20th, 2024

விபத்துக்குள்ளன ஹெலிகாப்டரின் சிறப்புகள்

Byமதி

Dec 8, 2021

இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் இராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்கில் மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஹெலிகாப்டரின் சிறப்பு என்ன?

ரஷிய நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸிடமிருந்து இந்தியா எம்.ஐ 17 விஐ ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டரை வாங்கியது. இது 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று.

இதனை தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும். கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை. கதவுகளை இழுவை மூலம் திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள், எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் உள்ளன

இந்த ஹெலிகாப்டரில் ஷட்டர்ன் வி ரக துப்பாக்கிகள், எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23எம்எம் எந்திர துப்பாக்கிகள், பிகேடி எந்திர துப்பாக்கி, ஏகேஎம் எந்திரதுப்பாக்கி மூலம் எதிரிகளை சுடமுடியும் தாக்க முடியும். எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பது, வாகனங்களை அழிப்பது, குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை சரியாகத் தாக்குவது போன்றவற்றை இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்யலாம்.

இந்த ஹெலிகாப்டரில் போம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். இது ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும்.

இது மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியும். அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *