சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. சென்னையில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தி.நகர், தாம்பரம், ராயபேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.