

தொடர் கனமழை காரணமாக காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு 5,000 முதல் 6,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் நேற்று தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
