• Wed. Apr 24th, 2024

நீட் தேர்வால் மாணவர் விஷம் குடித்து உயரிழப்பு…

சேலம் அருகே நீட்தேர்வு முடிவு வருவதற்கு முன்பாகவே பயத்தில் விஷம் குடித்த மாணவர் உயிரிழப்பு..சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சுபாஷ் சந்திர போஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து வந்துள்ளார்.முதல் முறை நீட்தேர்வில் 158 மதிப்பெண்களும், தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் 261 மதிப்பெண்களும் பெற்றிருந்த நிலையில், நீட் தேர்வு முடிவு வருவதற்கு முன்பாகவே கடந்த நவம்பர் 1ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில் பெற்றோர் மாணவர் சுபாஷ் சந்திரபோஸை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


தற்போது மாணவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு எழுத பயந்து சேலம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்த நிலையில் சேலத்தில் மேலும் ஒரு மாணவர் தேர்வு முடிவு வருவதற்கு முன்பாகவே தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *