

மதுரை மாநகர் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென ராட்சத மரம் ஒன்றும், தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 7 க்கும் மேற்பட்ட மரங்கள் மழையின் காரணமாக வேருடன் சரிந்து விழுந்தது. இதில் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு அடைந்ததை தொடர்ந்து நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மரம் ஒன்று அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் விழுந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.


