டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 112.1 மி.மீ. கனமழை பெய்துள்ளது.
டெல்லியில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று காலை முதலே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நாளை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கனமழை எச்சரிக்கை
