• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கனமழை எதிரொலி : 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Byவிஷா

Dec 14, 2024

கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா வெதர் மென் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முதல் தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி மற்றம் கல்லுரிகளுக்கும், விழுப்புரம், திருச்சி, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.